Skip to main content

அரசு விளையாட்டு விடுதியில் சேர வாய்ப்பு

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர, ஆர்வமுள்ள மாணவ - மாணவியர், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ - மாணவியர், விளையாட்டு
துறையில் சாதனை படைப்பதற்காக, நல்ல பயிற்சி, தங்குமிடம், உணவுடன் கூடிய, முதல்நிலை விளையாட்டு மைய விடுதிகள் நடத்தப்படுகின்றன.


இதில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர், 2018 - -19க்கான சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை, இன்று முதல், மாவட்ட விளையாட்டு அலுவலர்களை அணுகி பெறலாம். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேசிய, மாநில அளவில், வெற்றி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 18ம் தேதி காலை, 8:00 மணிக்குள், மாநில தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்