Skip to main content

501-க்கு ஜியோ அதிரடி Exchange Offer!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், `ஜியோ மான்சூன் ஹங்காமா' என்னும் அதிரடி எக்சேஞ்ச் சலுகையை இன்று (ஜூலை 21) அறிமுகம் செய்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூட்யூப் உள்ளிட்ட சிறப்பம்சங்கள்
கொண்ட ஜியோவின் பிரத்யேக மொபைலை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.1500க்கு விற்பனையாகும் இந்த மொபைலுக்கு தற்போது `ஜியோ மான்சூன் ஹங்காமா' என்னும் அதிரடி எக்சேஞ்ச் சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 2017ஆம் ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த பழைய ஃபீச்சர் போனைப் பயன்படுத்துவோர் தற்போது அதனுடன் ரூ.501-ஐ கூடுதலாகச் செலுத்தி புதிய மாடல் ஜியோ போனை பெற்றுக்கொள்ளும் எக்சேஞ்ச் ஆஃபரை ஜியோ வழங்கியுள்ளது.

இந்த மான்சூன் ஹங்காமா சலுகையுடன் சிறப்பு ரீசார்ஜ் சலுகையையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.594க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 6 மாதங்களுக்கு இலவச டேட்டா சலுகையையும் ஜியோ வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த ஜியோ மான்சூன் ஹங்காமா சலுகையுடன் ரூ.101 கூடுதலாகச் செலுத்தினால் 6ஜிபி டேட்டா போனஸாக வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.99 விலையில் தனி சலுகை ஒன்றையும் வழங்கியுள்ளது. அந்தச் சலுகையில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகளின் மூலம் ஜியோபோன் பயனர்கள் தங்களது டெலிகாம் செலவில் கிட்டத்தட்ட 50% வரை சேமிக்க முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்