Skip to main content

வரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓர் அரிய நிகழ்வு

பூமியின் வெளிப்புற கோள்களில் ஒன்றான, செவ்வாய் கோள், 15 ஆண்டுகளுக்கு பின், பூமிக்கு மிக அருகே வருகிறது. இதை பார்க்க, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது
குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பு செயல் இயக்குனர், சவுந்தரராஜ பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பூமியின் ஆறு வெளிப்புற கோள்களில் ஒன்றான செவ்வாயை, 26 மாதங்களுக்கு ஒரு முறை, பூமி கடந்து செல்லும்.அப்போது, செவ்வாய்க்கு நேரே உள்ள நீள்வட்ட பாதையில், பூமி இருக்கும். பூமியை விட, நீண்ட வட்ட பாதையில், செவ்வாய் சுழலும் என்பதால், இரண்டு கோள்களுக்கும் இடையிலான துாரம், ஒவ்வொரு நேரமும் மாறுபடும்.இதன்படி, வரும், 27ல், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே, எதிர் அமைவு ஏற்படுகிறது. இதில், வரும், 31ல், பூமியின் அருகே, செவ்வாய் நெருங்கி வரும்.அப்போது, இரண்டு கோள்களுக்கும் இடையிலான துாரம், 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும். 

வழக்கமாக, செவ்வாய் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம், 38 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.ஆனால், எப்போதாவது தான், மிகவும் அரிதாக. 5.5 கோடி கி.மீ., வரை செவ்வாய் நெருங்கும்.இதற்கு முன், 2003, ஆக.,27ல், 5.5 கோடி கி.மீ., துாரத்தில், பூமியை செவ்வாய் நெருங்கி வந்தது.தற்போது, வரும், 31ல் வரவுள்ளது. அப்போது, செவ்வாயின் தோற்ற அளவு, 24.3 கோண வினாடிகளாக இருக்கும். அத்துடன், செவ்வாய் சற்று பெரிதாகவும், ஒளியுடனும் காணப்படும்.
இந்த நிகழ்வு மீண்டும், 2035 செப்., 15ல் தான் ஏற்படும். அதேபோல், பூமிக்கு நேரே, செவ்வாய் எதிரமைவது 2016, மே, 22ல் நிகழ்ந்தது. அப்போது, செவ்வாய், 7.6 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது. இந்த எதிரமைவு அடுத்து, 2020 அக்., 13ல் தான் நிகழும்.எனவே, இந்த அரிய நிகழ்வை, சென்னை, பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், வரும், 25 முதல், 31 வரை, மாலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை,பொது மக்கள் பார்க்க,தொலைநோக்கியுடன் சிறப்பு வசதிகள்


செய்யப்பட்டுள்ளன

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி