Skip to main content

you tubeல் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி?

உலகின் பிரபல ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது.
ஒரு வை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை காவு வாங்கி, உங்களை தொடர்ந்து பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது.


சிலர் பார்க்க ஆரம்பித்தால், பல மணி நேரங்கள் அதிலே மூழ்கிடுவர். சிலர் தேர்வு செய்யப்பட்ட அல்லது தங்களுக்கு மிகவும் பிடித்தமான தரவுகளை மட்டுமே பார்த்து ரசிப்பர். இவ்வாறு பெரும்பாலானோர் பார்த்து விட்டு, சில க்களை உடனே தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அதனை பகிர்ந்து கொள்வர்.


இவ்வாறு செய்து முடிக்க யூடியூப் லின்க்-ஐ ஷேர் செய்ய மற்றொரு செயலி அல்லது சேவையை பயன்படுத்துவர். ஆனால் இவ்வாறு செய்ய யூடியூப் தளத்தையே பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா? யூடியூபில் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கும் ஏராளமான சேனல்களில் இருந்து உங்களுக்கு.!யூடியூப் ஆப் பயன்படுத்தலாம்:

* முதலில் யூடியூப் ஆப் ஓபன் செய்து, லாக் இன் செய்யவும்

* அடுத்து ஆக்டிவிட்டி (Activity) டேப்-ஐ க்ளிக் செய்யவும்

* இங்கு ஷேர்டு மற்றும் நோட்டிஃபிகேஷன்ஸ் (Shared and notifications) என இரு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் ஷேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


* இதில் கான்டாக்ட்ஸ் (Contacts) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

* இங்கு ஷேர் செய்ய ஏதுவாக உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (You May Know) என்ற அடிப்படையில் சில கான்டாக்ட்களை யூடியூப் வரிசைப்படுத்தும்

* இதைத் தொடர்ந்து, கான்டாக்ட்களை சேர்க்க இரண்டு ஆப்ஷன்களை யூடியூப் வழங்குகிறது

* முதலாவதாக இன்விடேஷன் லின்க் அனுப்புவது (invitation link). இந்த லின்க்-ஐ உங்களது நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களை சேர்க்க செய்யும்.

* இரண்டாவதாக, ஃபைன்ட் யுவர் போன்புக் (Find in your phone book), இது சற்றே எளிமையான வழிமுறையாகும்.

* இனி சாட் (chat) ஆப்ஷனை க்ளிக் செய்தால் தனிப்பட்ட சாட் விண்டோவை பார்க்க முடியும்


* அடுத்து வலதுபுறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தால் கான்டாக்ட் சேர்ப்பது (adding a participant), சாட் மற்றும் மியூட் ஆப்ஷன்களை விட வேண்டும்

* ஷேர்டு டேபில் இருக்கும் நியூ க்ரூப் ஆப்ஷனை க்ளிக் செய்து புதிய க்ரூப்களையும் துவங்க முடியும். முதலில் க்ரூப் பெயரை பதிவிட்டு அதன்பின் உங்களது கான்டாக்ட்-இல் இருப்பவர்களை சேர்க்க வேண்டும்.
யூடியூப் நோட்டிஃபிகேஷன்

இந்த ஆப்ஷன் வேலை செய்ய, நீங்கள் ஷேர் செய்யும் கான்டாக்ட் தங்களது யூடியூப் நோட்டிஃபிகேஷன் செட்டிங்-களை ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும். ஆஃப் செய்திருப்பின் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் காண்பிக்காது.
சமீபத்தில் இந்த வசதி யூடியூப் வலைத்தள பதிப்பிலும் சேர்க்கப்பட்டது. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

* யூடியூப் பக்கத்திற்கு சென்று லாக் இன் செய்து முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும்

* இங்கு பெல் மற்றும் க்விக் லான்ச்சர் ஆப்ஷன்களுக்கு இடையில் ஷேர் பட்டன் காணப்படும்

* இதனை க்ளிக் செய்து யூடியூபில் நீங்கள் வைத்திருக்கும் கான்டாக்ட்களை பார்க்க முடியும்


* புதிதாய் கான்டாக்ட்-ஐ சேர்க்க, கான்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

* இங்கு ஷேர் செய்ய ஏதுவாக உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (You May Know) என்ற அடிப்படையில் சில கான்டாக்ட்களை யூடியூப் வரிசைப்படுத்தப்படும்

* பரிந்துரை பட்டியலில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவோர் இல்லையெனில் அவர்களுக்கு இன்விடேஷன் அனுப்புவதை தவிர்த்து வேறு வழியே கிடையாது. இந்த லின்க்-ஐ உங்களது நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களை சேர்க்க செய்யும்.

* யூடியூப் மொபைல் செயலியில் வழங்கப்பட்டதை போன்றே க்ரூப் உருவாக்குவது, லீவிங் கான்வெர்சேஷன் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்வது உள்ளிட்டவை டெஸ்க்டாப் பதிப்பிலும் வழங்கப்படுகிறது.
டெஸ்க்டாப்


மொபைல் ஆப் போன்றே டெஸ்க்டாப் தளத்திலும் இந்த ஆப்ஷன் வேலை செய்ய, நீங்கள் ஷேர் செய்யும் கான்டாக்ட் தங்களது யூடியூப் நோட்டிஃபிகேஷன் செட்டிங்-களை ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும். ஆஃப் செய்திருப்பின் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் காண்பிக்காது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்