Skip to main content

வாட்ஸ்அப் புகைப்படம், வீடியோக்களால் போன் வேகம் குறைவதை எப்படி சரி செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப் செயலியை தினமும் சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் வரவுக்கு பின் மெசேஜிங் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது எனலாம்.


சமீப காலங்களில் மெசேஜிங் செயலியை ஓடிபி மற்றும் இதர விளம்பர குறுந்தகவல்களை அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். வாட்ஸ்அப் செயலி நம் வாழ்வின் நீங்கா அங்கமாக மாறிவிட்ட நிலையில், இந்த செயலி நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதை எளிமையாக்கியுள்ளது.


எனினும் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் அவசியமற்ற புகைப்படங்கள், ஆடியோ மற்றும் க்கள் ஸ்மார்ட்போனின் மெமரியை ஆக்கிரமித்துக் கொள்ளும். இவை ஸ்மார்ட்போன்களில் மெமரியை தீர்ப்பதை தவிர எவ்வித பாதிப்பையும் செய்யாது என்றாலும், சில ஸ்மார்ட்போன்களில் மெமரி முழுமையாகிவிட்டால், அதன் வேகம் குறைந்து பயன்படுத்தும் போது நம் அமைதியை வெகுவாக சோதிக்கும்.

இந்த பிரச்சனையில் இருந்து விடுப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செய்யும் வழிமுறைகள்:

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் தங்களது வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸ் -- டேட்டா அன்ட் ஸ்டோரேஜ் -- மீடியா ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷன்களுக்கு சென்று மூன்று ஆப்ஷன்களை அன்செக் செய்ய வேண்டும்.

ஐபோன் பயன்படுத்துவோர் செய்ய வேண்டியவை:


ஐபோன் மாடல்களை பயன்படுத்துவோர் வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸ் -- டேட்டா அன்ட் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷன்களுக்கு சென்று புகைப்படம், , ஆடியோ மற்றும் இதர டாக்குமென்ட்களுக்கான ஆப்ஷன்களை அன்செக் செய்யவும்.

வாட்ஸ்அப் வாசிகள் மொபைல் டேட்டா, போன் ஸ்டோரேஜை சேமிக்க டிப்ஸ்:

1 - பெரிய ஃபைல்களுக்கான ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்யவும். வைபை இணைப்பில் இருக்கும் போது மட்டும் ஆட்டோ டவுன்லோடு செய்யும் ஆப்ஷனை வாட்ஸ்அப் செயலியில் செயல்படுத்தலாம்.

2 - சாட் பேக்கப் செய்யவும் வைபை இணைப்பை மட்டும் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் நீங்கள் செய்யும் சாட் மற்றும் புகைப்படங்களை சேமித்து வைக்கும். இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இவ்வாறு பேக்கப் செய்யும் போது அதிக டேட்டா பயன்படுத்தப்படும் என்பதால் இதை செய்யும் வைபை இணைப்பை பயன்படுத்த வேண்டும்.


3 - வாட்ஸ்அப் வழங்கும் மற்றொரு ஆப்ஷனில் உங்களது கான்டாக்ட்களை பார்ப்பதோடு, அவை எவ்வளவு மெமரியை பயன்படுத்துகிறது என்பதையும் பார்க்க முடியும். இதற்கு வாட்ஸ்அப் -- செட்டிங்ஸ் -- ஸ்டோரேஜ் அன்ட் டேட்டா யூசேஜ் -- ஸ்டோரேஜ் யூசேஜ்.

இந்த ஆப்ஷனில் உங்களது சமீபத்திய சாட் விவரங்கள் மற்றும் அவை எடுத்துக் கொண்ட மெமரி அளவை பார்க்க முடியும். இதற்கு சாட் -- மேனேஜ் மெசேஜஸ் -- க்ளியர் மெசேஜஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா