Skip to main content

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக  பணி அமர்த்தப்பட உள்ளனர்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது

இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்

அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது.

அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்.


அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.

பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்


இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்


இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்