Skip to main content

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா: அரசு ஊழியர் சங்கம் மறுப்பு

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

தேனியில் அவர் கூறியதாவது:20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 67 சங்கங்கள் காலவரையற்ற
வேலை நிறுத்தத்தில் பிப். 10 முதல் ஈடுபடுகின்றன. மாநில முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் தொகுப்பூதியம் பெறுபவர்களும் பங்கேற்பர்.அரசு ஊழியர் வசூலித்த தானே புயல் நிவாரண நிதியை கூட முதல்வர், தலைமை செயலாளரை சந்தித்து வழங்க முடியவில்லை. சங்க பிரதிநிதிகளை சந்திப்பது இல்லை.
அரசின் நிதிவருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுவதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தவறான தகவலை கூறி வருகிறார். அரசின் நிதிவருவாய் 41,215,57 லட்சம் கோடி. இதில் கல்வி மானியத்திற்கு 40 சதவீத நிதி செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகை ரூ.30 ஆயிரம் கோடி. இதில் முதல்வர்,அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். 20 ஆயிரம் கோடியில் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இது அரசின் வருவாயில் 30 சதவீதம், என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி