Skip to main content

What is the Zika virus - DAY SCIENCE



உலகை அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸ் எப்படி பரவுகிறது?

உலகை அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.ஜிக்கா வைரஸ் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஜிக்கா வைரஸ் தற்போது 24 நாடுகளில் பரவியுள்ளது. அதில் தென் அமெரிக்க நாடான பிரேசலில் தான் அதிகமானோர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை பரப்பும் அதே வகை கொசுக்கள் மூலம் தான் ஜிக்கா வைரஸும் பரவுகிறது.

ஜிக்கா வைரஸ் பெரும்பாலும் கொசுக்கள் மூலம் தான் மனிதர்களிடையே பரவுகிறது. இந்த கொசுக்கள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கட்டிடங்களை சுற்றி வாழ்கின்றன. ஏடீஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் தான் செயல்படுகின்றன.
ஏடீஸ் கொசுக்கள் அதிகாலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மனிதர்களை கடிக்கின்றன. ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரின் ரத்தத்தை யாருக்காவது ஏற்றினால் அவரையும் வைரஸ் தாக்கும். ஜிக்கா வைரஸ் செக்ஸ் மூலமும் பரவுகிறது. மேலும் கர்ப்பிணியிடம் இருந்து குழந்தையை ஜிக்கா வைரஸ் தாக்குகிறது.

ஜிக்கா வைரஸால் தாக்கப்பட்டவர்களில் 5ல் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜிக்கா வைரஸால் காய்ச்சல், அரிப்பு, மூட்டு வலி, கண் சிவப்பாகுதல், தசை வலி, தலைவலி ஒரு வாரத்திற்கு இருக்கும். செரிமானப் பிரச்சனையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். ஜிக்கா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளும் டெங்கு, சிக்குன்குனியாவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்.

ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஜிக்கா வைரஸ் தாக்கினால் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், நிறைய நீர் குடிக்க வேண்டும், காய்ச்சலை கட்டுப்படுத்த மருந்து உட்கொள்ள வேண்டும்.

ஜிக்கா வைரஸ் பரவாமல் தடுக்க கொசுக்கள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். கதவு, ஜன்னல்களை பூட்டி வைப்பதுடன் கொசுக்களை அழிக்கும் கிரீம்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். ஜிக்கா வைரஸ் பரவும் இடங்களுக்கு பயணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா