Skip to main content

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!

  நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்  ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2016 மே இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண் கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


            ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1.20 கோடி பேர் இன்னும் ஆதார் எண்ணுக்கு பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60 சதவீதம் மாணவர்கள் உள்ளதாக தெரியவந்தது.மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை
மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களை அலையவிடாமல்தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு
நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த கர்நாடக மாநிலபொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர்
கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும்
திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம்முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளைஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்