Skip to main content

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர் பணி.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவ
ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 37 பணி: பேராசிரியர், இணை பேராசிரியர் உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும், இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர். விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500/- க்கான (தாழ்த்தப்பட்ட வகுப்பு எனில் ரூ.300/-) வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்” என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.1.2016. ஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கல்விநிலைப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ந.க.எண் அ1/2609/2012 நாள் 12.8.2013 மற்றும் ந.க.எண் அ1/2609/2012 நாள்:19.12.2013 ஆகியன திரும்ப பெறப்ப ́கிறது. செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டணம் உரியவர்களுக்கு மீள அளிக்கப்படும். குறிப்பு: நேர்காணலில் மேற்குறித்த அவ்வவ் பதவிகளுக்கான தகுதி நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுநிறைவு அளிக்காத நிலையில் அவ்வவ் பதவிகளுக்குக் கீழ்நிலையில் உள்ள பதவிகளுக்கே நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கருதப்படுவார்கள். மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களை நிரப்புவது அல்லது நிரப்பாமல் இருப்பதற்கான உரிமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. ஒரு பதிவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamiluniversity.ac.in/tamil/wp-content/uploads/2016/01/application-form.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு