Skip to main content

கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க கல்வித்துறை உத்தரவு

கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011 ஜன.,1 க்குப்பின், தனிஊ
தியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும்.


ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்