Skip to main content

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்

உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ்,
7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன.

பற்றாக்குறை

உள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில், பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடியாமல்உள்ளனர்.எனவே, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை இந்தியா திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன. 

இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புக்களின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளுக்கு, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது குறித்து, தமிழக அரசின்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவு:

பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, தனியார் முகமைகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது, முழுநேரம் மற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகள் நியமிக்கலாம். பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்யலாம். துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். சுகாதார உத்தரவாதம் இதற்கான செலவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி வரி மூலமும் ஈடுகட்டலாம். 2015 - 16ல், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க, 17 கோடி ரூபாயும், துப்புரவுப் பணியாளர் ஊதியத்துக்காக, 40 கோடி ரூபாயும் என ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, உள்ளாட்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல நேரங்களில், பள்ளி கழிப்பறைகளிலிருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் போதிய, துப்புரவுப் பணியாளர் இல்லாத நிலையில், துாய்மைப் பணியை தனியாரிடம் அளிக்க அரசு முன் வந்துள்ளது. இத்திட்டம் மூலம், குழந்தைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்