Skip to main content

'மொபைல் ஆப்'பில் 'இ - சேவை' மைய தகவல்

அரசு இ - சேவை மையங்களில், பல்வேறு வகையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சொத்து வரி, தொழில் வரி, கம்பெனி வரி, மின் கட்டணம் ஆகியவற்றையும், இ - சேவை மையத்தில் செலுத்தலாம்.
ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கான நாள் மற்று
ம் நேரம் பெற்றுக் கொள்ளுதல், ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன. அரசு இ - சேவை மையம் தொடர்பான தகவல்கள், மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ள, 'TACTV' என்ற பெயரில், மொபைல் போன், 'ஆப்' உருவாக்கப்பட்டு உள்ளது. இது, 'ஆண்டிராய்டில்' இயங்கும், மொபைல் போன்களில் மட்டுமே செயல்படும்.இந்த மொபைல் போன், 'ஆப்பை', பொதுமக்கள், 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதை பயன்படுத்தி, அரசு இ - சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகில் உள்ள மையத்திற்கு செல்லும் வழி, அங்கு வழங்கப்படும் சேவை தொடர்பான தகவல், விண்ணப்பம் செய்திருந்தால், அதன் தற்போதைய நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்