Skip to main content

போட்டித் தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவ பிரெய்லி புத்தகங்கள்


வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இணை இயக்குநர் தகவல்போட்டித்தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பிரெய்லி புத்தகங்களை வாங்கிக்கொடுக்க அரசு தயாராக இருப்பதாக வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித்துறை இணை இய
க்கு நர்டி.விஜயகுமார் தெரிவித்தார்.தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோ ருக்கான 3 நாள் கல்வி- வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு திடல் வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை தாங்கி னார். கருத்தரங்கை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) டி.விஜயகுமார் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு மத் திய, மாநில அரசு வேலை வாய்ப் பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. 

சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங் களைநிரப்புவதற்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்வந்தவண்ணம் உள்ளன. இதற் கான தேர்வுகளுக்கு பார்வையற்ற வர்களை தயார்படுத்தும் வகை யில் சென்னை கிண்டியில் விரை வில் சிறப்பு பயிற்சி அளிக்க உள் ளோம்.டிஎன்பிஎஸ்சி, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன், பேங்கிங், ரயில்வே என பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளுக்குப் பார் வையற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வெழு தும் மாணவர்களுக்கு உதவுவதற் கென ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) இயங்கு கிறது. இங்கு போட்டித்தேர்வுக் கான அனைத்துப் பாடப்புத்தகங் களும் உள்ளன. 

மேலும், போட் டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி யும் நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு தேவைப்பட்டால் பிரெய்லி புத்தகங்களையும் வாங்கிக்கொடுக்க தயாராக இருக் கிறோம். புத்தகங்கள் வாங்குவதற் கென அரசு கூடுதலாக ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.அரசு அளிக்கின்ற வாய்ப்பு வசதிகளை பார்வையற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதியலாம் என்றாலும் பார்வையற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழுடன் நேரில் சென்றுதான் பதிவுசெய்ய வேண்டும். பார்வை யற்றோருக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டால் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற் றுத்திறனாளிகள் வேலைவாய்ப் பற்றோர் உதவித்தொகையை பெறத் தகுதியுடையவர். ஆவர். இதன்படி, எஸ்எஸ்எல்சி முடித்தவர் களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டப் படிப்பு மற்றும்முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.

 இந்த உதவித் தொகையை 10 ஆண்டுகள் பெற லாம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வது, போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளின் பல் வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக, பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வி.பக்கிரி சாமி வரவேற்றார். துணைத்தலை வரும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியையுமான ராஜேஸ் வரி அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, பொதுச்செயலாளர் வி.எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார். 

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்