Skip to main content

'கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை'.

''காலியாக உள்ள கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்: மார்க்சிஸ்ட் - பாலபாரதி: 



அரசு கல்லுாரிகளில், புதிதாக துவங்கப்பட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு போதிய ஆசிரியர் இல்லை. கவுரவ ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர். அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அமைச்சர் பழனியப்பன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கவுரவ பேராசிரியர்களுக்கு, 6,000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களை நேரடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாது; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரந்தர பணியில் சேர்க்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2