Skip to main content

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியிட தடை

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு, நாளை நடக்கும் தேர்வின் முடிவை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


உயர் நீதிமன்றத்தில் வழக்கு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் என, பல மாவட்டங்களைச் சேர்ந்த, 51 பொறியாளர்கள் சேர்ந்து, தாக்கல் செய்த மனு:

நாங்கள், பட்டதாரி பொறியாளர்கள்; எங்களை, 'அப்ரன்டிஸ்' பயிற்சிக்கு, மின் வாரியம் தேர்ந்தெடுத்தது. கடந்த, 2010 முதல், 2015 வரையான காலகட்டங்களில், 'அப்ரன்டிசாக' பணியாற்றி உள்ளோம். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் பிரிவுக்கு என, மொத்தம், 375 உதவிப்பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் படி, 2015 டிசம்பரில், மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதனால், 'அப்ரன்டிஸ்' முடித்தவர்களும், எழுத்துத் தேர்வு எழுத வேண்டியதுள்ளது.

சட்டப்படி, 'அப்ரன்டிஸ்' ஆக பணியாற்றியவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க, முதலில், ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். அவர்களை பணி நியமனம் செய்து விட்டு, மீதி உள்ள காலியிடங்களுக்கு, வெளியில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

'அப்ரன்டிஸ்'களுக்கு வாய்ப்பு எனவே, 'அப்ரன்டிஸ்' ஆக பணியாற்றியவர்களுக்கு, எழுத்துத் தேர்வில் விலக்கு அளிக்கும்படி மனுக்கள் அனுப்பினோம்; எந்த பதிலும் இல்லை.எழுத்துத் தேர்வில், 'அப்ரன்டிஸ்' முடித்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது சட்ட ரோதமானது; எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். 'அப்ரன்டிஸ்' முடித்தவர்களை தேர்வு செய்ய திட்டம் வகுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று, மேலும், 31 பேர் சேர்ந்து, தனியாக தாக்கல் செய்த மனுவில், பயிற்சி
பெற்றவர்களுக்கு ஆதரவான, உயர் நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளனர்.
இம்மனுக்கள், நீதிபதி கல்யாணசுந்தரம் முன், விசாரணைக்கு வந்தன. 'ஜன., 31ல் நடக்க உள்ள எழுத்துத் தேர்வில், மனுதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும். பிப்., 16 வரை, தேர்வின் முடிவுகளை, மின் வாரியம் வெளியிடக் கூடாது' என, நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

விசாரணையை, பிப்., 16க்கு தள்ளிவைத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்