Skip to main content

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம்.


இது குறித்து  கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:

 அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தங்களது பிபிஓ எண், கருவூல விவரங்களை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். 

பதிவிறக்கம் செய்ய இயலாத ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் பிற்பகல் 3மணி முதல் 5 மணி வர நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். கருவூல அலகில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மருத்துவக் காப்பீடுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தால் ஒரு சந்தாவை நிறுத்தம் செய்தும், செலுத்திய சந்தா தொகையை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ரூ.2.5 லட்சம் அதற்கு மேலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், தங்களது வருமான வரி கணக்குத் தாளை மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களில் ஜனவரி மாத இறுதிக்குள் இரட்டைப் பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்