Skip to main content

சென்னை கணிதப் பேராசிரியர் சிவராமனுக்கு தேசிய விருது சிவராமன்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வழங்கும் விருதுக்கு சென்னை கணிதப் பேராசிரியர் இரா.சிவராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிப்ரவரி 29-ம் தேதி நடக்கும் தேசிய அறிவியல் தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.



சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் கணிதத் துறை இணை பேராசிரியராக பணியாற்றுபவர் இரா.சிவராமன். கணிதத்தைப் பரப்பும் நோக்கில் ‘பை மேத்தமேட்டிக்ஸ் அசோசி யேஷன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கணித மேதை ராமானுஜரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். கணிதத்தை கதைகளின் வழியாக விளக்கும் வகையில் அவர் எழுதிய ‘கதையில் கலந்த கணிதம்’ நூல், தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடர்ந்து கணிதக் கட்டுரைகளை எழுதிவருகிறார். உலகின் முதல் கணிதப் புத்தகம் முதலான சிறந்த கணிதப் புத்தகங்கள் பலவற்றின் உள்ளடக்கத்தை விளக்கி எழுதியுள்ளார். ராமானுஜ னின் சாதனைகள் உலகின் அறிவுத் துறைகளில் எத்தகைய தாக்கங் களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கட்டுரை வரைந்துள்ளார்.


கணிதத் துறையில் அவரது பங்களிப்புகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அறிவித்துள்ளது. தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 29-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்