Skip to main content

திடீர் செட் தேர்வு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் வேதனை

இன்று அன்னை தெரசா பல்கலை கழகம் அடுத்த மாதம் 21-2-2016 தேதியில் செட் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால்  விண்ணப்பதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தேர்வு எழுத அளிக்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை என க
வலை தெரிவித்துள்ளனர்.


மேலும் நடப்பாண்டில் முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களும் செட் தேர்வுக்கு தயராவதா இல்லை பல்கலை கழக பாடத்திட்டத்திற்கு தயாராவதா என புலம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் தேர்வு கட்டணம் அதிகம் (பொது- ரூ.1500 , MBC&BC&BCM -1250 மற்றும் SC,/ST/PH&VH)  என நிர்ணயித்துள்ளது. இது மாணவர்களிடையே அரசின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைய வைத்துள்ளது. மேலும் அன்னை தெரசா பல்கலை கழகத்தில் துணை வேந்தர் இல்லாமல் செட் தேர்வு நடத்துவதால் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு நடத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் புதிய தேர்வு தேதியுடன் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து மறு அறிவிப்பினை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு செட் நெட் சங்கத்தின் மண்டல பொறுப்பாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்