Skip to main content

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்:

TNTET:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள். மத்திய அரசின் இலவச கட்
டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தாலும் தமிழ கத்தில் அது தொடர்பான அர சாணை 15.11.2011 அன்றுதான் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பாக அரசுப் பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ பணி நியமன முன்னேற்பாடுகள் தொடங்கியிருப் பின் அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் 23.8.2010 முதல் 23.8.2012 வரையிலான காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டது. தகுதித் தேர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்ட15.11.2011 முதல் இந்த 5 ஆண்டு கால அவகாசம் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதியுடன் ஐந்தாண்டு காலக்கெடு முடிவடை கிறது. தமிழகத்தில் கடந்த 2012 ஜூலை மாதம் நடைபெற்ற முதல் தகுதித் தேர்வுக்கு அளிக்கப்பட்ட நேரம் போதாது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 


இதைத்தொடர்ந்து மறுதேர்வு அதே ஆண்டு அக்டோபர் மாதமும், கடைசியாக 2013 ஆகஸ்ட் மாதமும் என கடந்த 4 ஆண்டு களில் 3 தேர்வுகள் மட்டுமே நடத் தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 2 தகுதித் தேர்வுகள் நடத்தப்படவேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அதுபோன்று தகுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேநேரத்தில் சிபிஎஸ்இ-யின் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது இது வரை 8 முறை நடத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முழு அளவில் நடைபெற்ற 2 தகுதித் தேர்வுகளிலும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் கணிசமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்ற போதிலும் இன்னும் 3 ஆயிரம் பேர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணி யில் இருந்துவருகின்றனர். தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத காரணத் தால் அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்திவைக் கப்பட்டிருப்பதுடன் தகுதிகாண் பருவம்முடிந்தும் அவர்கள் இன்னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறும்போது, “ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைத் திருக்கும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இன்னொரு தரப்பு ஆசிரியர்கள் கூறும்போது, “தகுதித்தேர்வு தொடர் பான மத்திய அரசின் உத்தரவு வருவதற்கு முன்பு பணி நியமன பணிகள் தொடங்கி அதன்பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்தது போல எங்களுக்கும் தகுதித் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று வேண்டு கோள் விடுத்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்