Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வு: பார்வையற்றோருக்கு பயிற்சி: அதிகாரி தகவல்.

பார்வையற்றோர் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி
அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு அதிகாரி கண்ணன் தெரிவித்தார். 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் பார்வையற்றோருக்கான 2 ஆண்டு சுயவேலைவாய்ப்பு பயிற்சியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கண்ணன் பேசியதாவது: காகிதத்தில் அலுவலக உறைகள், கோப்புகள், பதிவேடுகள் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி அளித்து சுயவேலைவாய்ப்பில் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, புதிதாக கழிவுக் காகிதம் மூலம் பல்வேறு பைகள் தயாரிப்புப் பயிற்சி, காட்டன் துணிகளில் இருந்து அழகுசாதனப் பொருள்கள், நார்ப் பொருள்களில் இருந்து கால் மிதியடிகள், தையல் ஆகியவற்றில் 30 பேருக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளனர். இதில், 10-ஆம் வகுப்பும், பட்டப்படிப்பு வரையிலும் படித்த பார்வையற்றோர் இரு பாலரும் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர், குரூப்-1, 2 தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இவர்கள் எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், அது தொடர்பான பாடங்களை மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றில் பதிவேற்றம் செய்து காதொலிக் கருவி மூலம் எளிதாகப் பயிற்சி அளிக்க முடியும் என்றார் அவர். தனியார் நிதி நிறுவன மேலாளர் சி.சுப்பையா. சங்கத் தலைவர் கே.வி.பக்கிரிசாமி, உதவித் தலைவரும், காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான இ.ராஜேஸ்வரி, பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற முதல்வரும், உதவித் தலைவருமான கே.தியாகராஜன், செயலர் சந்திரசேகரன், பயிற்றுநர்கள் ஜெயஸ்ரீ, அகிலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி