Skip to main content

10ம் வகுப்பு திருப்ப தேர்வுகள்: பிப்ரவரி 1ல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்பத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடப்பது வழக்கம். 



கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்தது. அப்போது நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் 1, 2, 3, 4 தேதிகளில் மட்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருத்த மழை சேதம் ஏற்பட்டது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 31 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகளை ஜனவரி 11ம் தேதி தொடங்கி 27ம் தேதிவரை நடத்த அரசு உத்தரவிட்டது. இதன்படி, அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. அடுத்த வாரம் தேர்வுகள் முடிய உள்ளன. இதற்கிடையே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி மாதமே நடத்தி  முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டு அதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் அரையாண்டு தேர்வுகளை எழுதி வரும்போதே, செய்முறை தேர்வுக்கும் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், இந்த கல்வியாண்டுக்கான திருப்பத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி முதல் திருப்பத் தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடத்த வேண்டும் என்றும், இரண்டாம் திருப்பத் தேர்வை பிப்ரவரி 15ம் ேததி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் திருப்பத் தேர்வில் பிப்ரவரி 1ம் தேதி மொழித்தாள் -1, 2ம் தேதி மொழித்தாள் -2, 3ம் தேதி ஆங்கிலம் தாள் -1, 4ம் தேதி ஆங்கிலம் தாள் -2, 6ம் தேதி கணக்கு, 8ம் தேதி அறிவியல், 10ம் தேதி சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத வேண்டும். 


இரண்டாம் திருப்பத் தேர்வில் பிப்ரவரி 15ம் தேதி கணக்கு, 16ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல், மார்ச் 5ம் தேதி மொழித்தாள் -1, 7ம் தேதி மொழித்தாள் -2, 8ம் தேதி ஆங்கிலம் தாள் -1, 9ம் தேதி ஆங்கிலம் தாள் -2 தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுகள் முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கும், அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுக்கும் தயாராக வேண்டும். தொடர்ச்சியாக மாற்றி மாற்றி தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதால் இரவு பகலாக கண்விழித்து படிக்கும் நிலையும், மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்