Skip to main content

சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின்
கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர்- பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்-துணை விடுதிக் காப்பாளர் பணியிடங்கள் சில காலியாகவுள்ளன.

 தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதி வரை அனுப்பலாம். இந்தப் பணியிடங்கள் குறித்த அனைத்து அறிவுரைகள், விவரங்கள்-மாதிரி விண்ணப்பத்தினை www.tn.gov.in, www.scd.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி