Skip to main content

'நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு

இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தே
ர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.


நாட்டிலுள்ள 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மதுரையில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது.தேர்வு மையத்தில் ஏற்படும், அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்க, 'விண்ணப்பதாரர்கள் தங்கள் கைகளில் அணிந்துள்ள கைக்கடிகாரம், பேனா, தோல் மற்றும் துணியினாலான 'பை'களை அறைக்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. தேர்வு அறையில் பேனா வழங்கப்படும். இதுகுறித்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.


'நெட்' தேர்வில் பங்கேற்க உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: வட இந்தியாவில் நடந்த தேர்வு குளறுபடிகளை தவிர்க்கவே, யு.ஜி.சி., இந்த விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது.


தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய 14 நடைமுறைகள் குறித்து டிச.,15ல் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளும்படி விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்தந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு அறை அனுமதி சீட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறை பேனா, பென்சில், போன்ற பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. இம்முறை அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை, என்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா