Skip to main content

மாற்றுத் திறனாளி பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள் நல மாணவர் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர்-பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில்
காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்பட்டு, விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பெருமழையின் காரணமாக, கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் 21 வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம். விவரங்களை www.tn.gov.in & www.scd.tn.gov.in என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்