Skip to main content

புதிய தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் நாளை வெளியீடு:

புதிய தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் நாளை வெளியீடு: 19-ல் தொடங்கும் டிச.12-ல் தொடங்கவிருந்த தொலைதூரக் கல்வி தேர்வுகள் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் 19-ம் தேதி தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட்
ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தின் இளங்கலை, முதுகலை தேர்வுகள், தொழில்சார் படிப்பு தேர்வுகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் தேர்வுகள் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்தன. இந்த தேர்வு கள் அனைத்தும் 19-ம் தேதி தொடங்கும். தேர்வுகள் வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நடைபெறும்.
திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கால அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) 10-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக இந்த இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2