Skip to main content

வீட்டு முகவரிக்கே பாடப் புத்தகங்கள்: தமிழக அரசு புதிய ஏற்பாடு

மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


 கடுமையான வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, பாடநூல்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் யாரேனும் பாடநூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தின் (www.textbookcorp.in) வழியாகப் பதிவு செய்து, அவர்களின் வீட்டு முகவரிக்கே பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம்.
 இதுதவிர தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையைப் பயன்படுத்தி உடனுக்குடன் பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்