Skip to main content

மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


       மிலாது நபியை கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். 

இதையடுத்து, 23-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுருந்த அரசு விடுமுறையை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற விருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளன. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகமும் டிசம்பர் 24-ஆம் தேதி நடக்க இருந்த இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி