Skip to main content

72 மணி நேரம் மழை நீடிக்கும்;அடுத்த 48 மணிநேரம் மோசமாக இருக்கும்-

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆ
ய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த 40 மணிநேரத்துக்கும் அதிகமாக பெய்த மழையால் ஒட்டுமொத்த பெருநகரமே பிரளயத்தை எதிர்கொண்டிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் 48 மணிநேர மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் ரத்தோர் இன்று அளித்த பேட்டி: சென்னையில் இன்று மழையின் அளவு சற்று குறைந்துள்ள போதிலும், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 1976-க்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது இதுவரை மழையானது 50% பதிவாகியுள்ளது. இது 115% வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாம் அடுத்தடுத்து 3 கன மழைகளை இதற்கு முன் சந்தித்து இருக்கிறோம். தற்போது அடுத்தடுத்து 5 முறை குறுகிய இடைவெளியில் கன மழை பெய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச்செயலாளருடன் விவாதிக்க உள்ளோம். இவ்வாறு ரத்தோர் கூறினார்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2