Skip to main content

சுப்ரீம் கோர்ட்டின் 43வது தலைமை நீதிபதியாக தாக்குர்

புதுடில்லி :சுப்ரீம் கோர்ட்டின், 43வது தலைமை நீதிபதியாக, திரத் சிங் தாக்குர், 63, நேற்று பதவியேற்றார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.


         இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதியாக, டி.எஸ்.தாக்குர் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சதானந்த கவுடா, ஹர்ஷவர்த்தன், ஸ்மிருதி இரானி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, எம்.பி.,க்கள், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். டி.எஸ்.தாக்குர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இவரது தந்தை, டி.டி.தாக்குர், காஷ்மீர் துணை முதல்வராகவும், ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 
கடந்த 1972ல், ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில், பிளீடராக பணியைத் துவக்கிய, டி.எஸ்.தாக்குர், 1994ல், கூடுதல் நீதிபதியாகவும், அதன்பின், கர்நாடகா ஐகோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.டில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றிய டி.எஸ்.தாக்குர், 2009ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான அமர்வு தான், கிரிக்கெட் சூதாட்டம், மேற்கு வங்க சாரதா சிட் பண்ட் ஊழல், உ.பி., முன்னாள் அமைச்சர் பாபு சிங் குஷ்வஹா மீதான ஊழல் வழக்குகளில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தாக்குரின் பதவிக் காலம், 2017 ஜனவரி, 4 வரை உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா