Skip to main content

மீலாது நபி: அரசு விடுமுறை 24-க்கு மாற்றம்; வங்கிகள் 4 நாள்கள் செயல்படாது

மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி, அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


மிலாது நபியை ஒட்டி, அரசு விடுமுறை டிசம்பர் 23-ஆம் தேதி விடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, அரசு விடுமுறை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி உத்தரவிட்டுள்ளது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.


 4 நாள்கள் தொடர் விடுமுறை: டிசம்பர் 24-ஆம் தேதி விடுமுறை என்பதால், அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸும், 26, 27 ஆகிய நாள்கள் சனி, ஞாயிறு என்பதால் மொத்தம் 4 நாள்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
 வங்கிகளுக்கும் விடுமுறை: ஒவ்வொரு மாதமும் 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். மேலும், அரசு விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தும்.

 எனவே, வங்கிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. ஆகவே, இந்த வாரமே வங்கிகள், ஏ.டி.எம்.-களில் இருந்து தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2