Skip to main content

வீட்டு எண்ணுடன் புதிய வாக்காளர் பட்டியல் வழங்க சாத்தியமா?ஐகோர்ட்டு கேள்வி

வீட்டு எண்ணுடன் புதிய வாக்காளர் பட்டியல் வழங்க சாத்தியமா? தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு கேள்வி
வீட்டு எண்ணுடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியலை வழங்குவதற்கு சாத்தியம் உள்ளதா? என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-புதிய வாக்காளர் 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடந்த செப்டம்பர் 10-ந் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு 5 லட்சத்து 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 15 ஆயிரம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது‘ என்றும் கூறியிருந்தார். எனவே, புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம்.எண் இல்லை
ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கிய பட்டியலில், புதிய வாக்காளரின் பெயர், தந்தை பெயர், தெரு, வார்டு விவரங்கள் உள்ளன. ஆனால் வீட்டின் எண் இல்லை. இதனால், பட்டியலில் உள்ளவர்கள் உண்மையான வாக்காளர்கள்தானா? என்பதை சரிபார்க்க முடியவில்லை.
எனவே, வீட்டு எண்ணை குறிப்பிட்டு புதிய வாக்காளர் பட்டியல் விவரங்களை தரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இணையதளத்தில் உள்ளது 

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘புதிய வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. வீட்டு எண் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது‘ என்று கூறினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் இணையதளத்தில் உள்ள விவரங்களை கொண்டு, புதிய வாக்காளர்கள் பெயர் போலியானதா? சரியானதா? என்பதை சரிபார்ப்பது என்பது இயலாத காரியம்‘ என்று கூறினார். 
சாத்தியமா? இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு, நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அதைபோல, புதிய வாக்காளர் பெயர் பட்டியலை வெளியிடும்போது, அதில் உள்ள விவரங்களும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும். தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் நடைபெறுவதற்கு இன்றும் பல மாதங்கள் உள்ளன. எனவே, வீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் புதிய வாக்காளர் பட்டியலை வழங்குவதற்கு சாத்தியமா? என்பது குறித்து இந்த ஐகோர்ட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தொரிவிக்கவேண்டும். விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்‘ என்று கூறியுள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்