Skip to main content

பல லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடன், உயர்கல்வி நிறுவனங்களில் சேர விருப்பமுள்ள மாணவர், மாணவிகள் ஜே.இ.இ. எனப்படும் பொது நுழைவு தேர்வினை எழுதலாம்.

பொதுவாக பிளஸ்-2 முடித்தவுடன், பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற உயர் படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்., உள்ளிட்ட, மத்திய
அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என மாணவர்கள் பலரும் விரும்புவதுண்டு. பல மாணவர்களின் வாழ்நாள் கனவே அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதாகத்தான் இருக்கும்.

இத்தகைய உயர்தர கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு, அவர்கள் உயர்கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே அதாவது இறுதியாண்டு படிக்கும் போதே, பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும்.

இத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் என்ற பொது நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு, 2016 மே, 22ல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வினை, கவுஹாத்தி ஐ.ஐ.டி., நடத்துகிறது. இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கும். ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுதலாம். கூடுதல் விபரங்களுக்கு www.jeeadv.ac.inindex.php என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்