Skip to main content

புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்

புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் - சென்னை–கடலூரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த மண்டலம் கடலூர் மாவட்டத்தை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதன் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மிரட்டி வருகிறது.இதுபடி
ப்படியாக வலுப் பெற்று நேற்று இலங்கை அருகே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தொடர்ந்து அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் புதுவையிலும் தமிழ்நாடு முழுவதும் 3நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:–
தென்மேற்கு வங்ககடலில் இலங்கைக்கு அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.இன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களுக்கு அதிக அளவு மழை பெய்யும். புதன்கிழமைக்கு பின் மழையின் அளவு படிப்படியாக குறையும்.கடல் காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.
தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக நாகை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் என்ற இடத்தில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் சராசரியாக 35 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் 10 செ.மீ. மழை பெய்தால் அது இயல்பான மழை அளவாகும். இந்தசராசரி மழைக்கூட எல்லா இடத்திலும் பெய்த மழை அல்ல. ஒரு இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் பெய்துள்ளது.இவ்வாறு ரமணன் கூறினார்.புயல் சின்னத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை கொட்டி வருகிறது.இதனால் கடலூர் மாவட்டம் மீண்டும் கடுமையான சேதத்தை எதிர்நோக்கி உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டுவர படகுகளும் தயாராக உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.சென்னை, கடலூர் மட்டுமல்லாது புதுவையிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.இதனால் அணைகள் ஏரி, குளங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது வருகிறது. இதுவரை 468 பெரிய ஏரிகள் நிரம்பியுள்ளன.மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறு நாளும் 2 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்