Skip to main content

உலகின் முதலாவது அஞ்சல் தலை

அரசியல் தலைவர்களின் தலைகள் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகள் அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகக்கூட மாறுவதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆட்சி மாறும்போது அஞ்சல் தலைகளில் இடம்பெற்ற உருவப்படங்களும் மாறும் வழக்கம் நமது நாட்டில் ஆங்கிலேயர்கள் கா
லத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் அரசியோ அரசரோ மாறும்போது அஞ்சல் தலையின் வடிவமைப்பும்கூட மாறியது. 1856-க்கும் 1926-க்கும் இடைப்பட்ட காலத்தில் விக்டோரியா அரசி, ஏழாம் எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் அரசர்களின் உருவப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்திய அஞ்சல் தலைகளில் இடம்பெற்றன. அந்தக் காலகட்டத்தில் இந்திய அஞ்சல் தலைகள் லண்டனில்தான் அச்சிடப்பட்டன. 1926-ம் ஆண்டில் நாசிக் நகரத்தில் இந்தியா செக்யூரிட்டி பிரஸ் தொடங்கப்பட்டதும் அஞ்சல் தலைகளை அச்சிடும் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஞ்சல் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் குறிப்பதற்காக அஞ்சல் தலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்துதான் வெளியிட்டது. 1840-ம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட அந்த அஞ்சல் தலையின் பெயர் பென்னி பிளேக். பென்னி என்பது நாணயத்தின் பெயர். அஞ்சல் தலையை வெளியிட்ட இரண்டாவது நாடு பிரேஸில். ஆண்டு 1843.

ஆங்கிலேயர்காலத்து இந்தியாவின், சிந்து மாகாணத்தின் கமிஷனராக இருந்த பார்ட்ல் ஃபெரேரே என்பவர் 1852-ல் முதன்முதலாக காகிதத்திலான அஞ்சல் தலைகளை நடைமுறைப்படுத்தினார். புகழ்பெற்ற இந்த அஞ்சல் தலைகள்தான் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியக் கண்டத்திலும் முதலாவது காகிதத்திலான அஞ்சல்தலைகள்.

இந்த அஞ்சல் தலைகளின் அறிமுகத்துக்குப் பிறகு, இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் அஞ்சல் தலைகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனாலும் இந்தியா முழுவதுக்குமான அஞ்சல் தலைகளை அச்சிடும்வகையில் போதுமான இயந்திர வசதி அப்போது இல்லை. கேப்டன் துப்லியேர் என்பவர் பெருமுயற்சி எடுத்து லிதோகிராப் முறையில் அஞ்சல் தலைகளை அச்சிடுவதில் வெற்றிகண்டார். அவரது முயற்சியின் காரணமாகவே முதலாவது அகில இந்திய அஞ்சல் தலை 1854 செப்டம்பரில் வெளியானது.இங்கிலாந்தைச் சேர்ந்த ரவுலண்ட் ஹில் நவீன தபால்துறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தார். அஞ்சல் தலை திரட்டும் கலைக்கு ஃபிலேட்லி என்று பெயர். கிடைப்பதற்கு அரிதான அஞ்சல் தலைகளுக்கு மதிப்பு அதிகம். அதிலும் தப்பும் தவறுமாக அச்சிடப்பட்ட தலைகளின் விலை மதிப்பு அதிகமோ அதிகம்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு