Skip to main content

மார்க்கர்' பேனா பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டம்

புதுடில்லி:தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, ஆட்காட்டி விரலில், பிரஷால் அழியாத மை வைப்பதற்கு பதில், 'மார்க்கர்' பேனாவை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. 
தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, பாட்டிலில் நிரப்பப்பட்ட அழியாத மையை, பிரஷில் எடுத்து, ஓட்டு போட்ட நபரின் ஆ
ட்காட்டி விரலில் அடையாளம் பதிப்பது, 1962 முதல், நடைமுறையில் உள்ளது.ஆனால், 'பிரஷ் மூலம், கைவிரலில் மை வைப்பது, நேர்த்தியாக இல்லை' என, இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், தேர்தல் சமயங்களில், இங்க் பாட்டில் மற்றும் பிரஷ்களை எடுத்து செல்வதை காட்டிலும், மார்க்கர் பேனாக்களை எடுத்துச் செல்வது எளிதென, தேர்தல் கமிஷன் கருதியது.இதையடுத்து, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 'மைசூர் பெயின்ட்ஸ்' நிறுவனம் சப்ளை செய்த, மார்க்கர் பேனாவை பயன்படுத்தி, அதன் அழியாத தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது.'மார்க்கர் பேனா மீதான சோதனை அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வகை மார்க்கர் பேனாக்கள், ஆப்கானிஸ் தான் நாட்டில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் தயாரிக்கும் அழியாத இங்க், வேறு சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா