Skip to main content

ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை

'ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்
''ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கான, தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் வலியுறுத்தினார். அகில இந்திய வெளிநாட்டு
மருத்துவ பட்டதாரிகள் சங்கம், ரஷ்ய கலாசார மையம் மற்றும் இந்திய வாழ் ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்கம் இணைந்து, மருத்துவ படிப்பு அங்கீகார மாநாட்டை சென்னையில் நடத்தின.


சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான கற்பக விநாயகம் பேசுகையில், ''ஏழை, பணக்காரர் என, அனைவரும் மருத்துவம் பெற, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதற்கு அதிக மருத்துவர்கள் வேண்டும். எனவே, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில், தகுதியான பல்கலைகளில் படித்த டாக்டர்களை, தகுதித் தேர்வின்றி இந்தியாவில் அங்கீகரிக்க வேண்டும்,'' என்றார்.

தேசிய யுனானி கல்வி மைய முன்னாள் இயக்குனர் சையது கலிபுல்லா பேசுகையில், ''அலோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளை இணைக்க வேண்டும். ரஷ்ய பல்கலைகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மாணவர்கள் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், படித்து முடித்த அவர்களை பணியாற்ற அனுமதி மறுப்பது கேலிக்குரியது. ரஷ்ய அரசு இந்த விஷயத்தில், இந்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

ரஷ்ய கூட்டமைப்பு துாதர் செர்ஜி எல் கோடோவ் பேசுகையில், ''இந்தியாவை விட அதிக தொழில்நுட்பத்துடன் மருத்துவம் கற்றுத் தருகிறோம். எங்கள் டாக்டர்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளனர்,'' என்றார்.மாநாட்டில், அகில இந்திய வெளிநாடு மருத்துவ பட்டதாரிகள் சங்க காப்பாளர் டாக்டர் அமீர் ஜஹான், ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் நசீருல் அமீன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ், அண்ணா பல்கலை சர்வதேச துறை இயக்குனர் ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு