Skip to main content

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள்

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி
போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



 இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, இதைக் காரணம் காட்டி, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் நிறுத்தி வைப்பதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ராஜஸ்தானில் போலி கல்விச்சான்றிதழ்கள் விநியோகம்: 

ராஜஸ்தான் அரசின் உயர் கல்வித் துறையிடமிருந்து அனைத்து மாநில உயர்கல்வித் துறைகளுக்கும், அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டது.
 அதில், 2014 டிசம்பர் 17-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு (எண்.15) 14 குறித்து ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஜோத்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி மையத்திலிருந்து ஒரு மென்பொருளைப் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோத்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏராளமான போலியான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

 இந்தப் போலிச் சான்றிதழ்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியல், ராஜஸ்தான் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 எனவே, இதன் மூலம் எவரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து, தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சான்றிதழ்களை ஆய்வு செய்ய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவு: இந்தக் கடிதத்தின் நகலை கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள தமிழக உயர் கல்வித் துறை துணைச் செயலர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 அதில், கல்லூரிகளில் உள்ள அமைச்சுப் பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்கள், உரிய முறையில் உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படாத நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு, இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் அந்தந்த அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் உண்மைத்தன்மையை அறிந்து இயக்குநர் அலுவலகத்துக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கல்லூரிகளும் நடவடிக்கையில்

 தீவிரம்: இதனடிப்படையில், ஒவ்வொரு பேராசிரியரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழ் முதல், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. என அனைத்து கல்வித் தகுதியின் உண்மைத் தன்மையை அறியும் நடவடிக்கையை கல்லூரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்கு கல்லூரிப் பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

 அறிக்கையை அளிக்க அவகாசம்

 நீட்டிப்பு: இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

 ஏற்கெனவே பள்ளிகள் அளவில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டப் படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. தகுதிக்கான் சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. இதுதவிர்க்க முடியாதது. இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பேராசிரியர்களுக்கு இப்போது மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

"வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல'

 இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியதாவது:

 சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவது, அந்தந்தத் தேர்வு வாரியத்தின் பணி. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும்போதே, அனைத்துச் சான்றிதழ்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல. உண்மைத்தன்மை அறிக்கை பெற ஒவ்வொரு கல்வித் தகுதிக்கும் ரூ.600 முதல் ரூ.1000 வரை பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை உயர் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு