Skip to main content

7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்

7வது ஊதியக் குழு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு அருண் ஜெட்லியிடம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.
Highlights
900 பக்க அறிக்கைகொண்டது
23.5% ஊதிய உயர்வு பரிந்துரை.
24% பென்சன்தாரருக்கு பரிந்துரை
குறைந்த பட்டச ஊதியமாக ரூ 18,000 ஆக நிர்ணயம் செய்ய பரிந்துரை.
ஆண்டு ஊதிய உயர்வு 3%

இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது. இந்நிலையில், 7-வது சம்பளக்கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்