Skip to main content

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை "சிடி': பள்ளிகளுக்கு வழங்கல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா - விடை அடங்கிய "சிடி' பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது
. அதன் ஒருபகுதியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் தாவரவியல், உயிர்விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 11 பாடங்களுக்கு முக்கிய வினா-விடை அடங்கிய ஒரே "சிடி' தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கான இந்த "சிடி' அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.
இதை அவர்கள் பாடவாரியாக "பிரின்ட் அவுட்' எடுத்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்கள் முதல் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இது பயன்பெறும். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் இணையதள முகவரியிலும் இந்த வினா-விடையை பார்த்து படித்துக் கொள்ளலாம், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்