Skip to main content

2016 ல் 7 வது சம்பளக்கமிஷன் : நகராட்சி நிர்வாகங்கள் அச்சம்

  2016 ஜனவரி 1 முதல் ஏழாவது சம்பள கமிஷன் சம்பளம் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், ஏற்படும் நிதிச்சுமையை எண்ணி, நகராட்சி நிர்வாகங்கள் அச்சமடைந்து உள்ளன.தமிழகத்தில் 148 நகராட்சிகள் உள்ளன. இவற்றின் முக்கிய வருவாய் சொத்துவரி
, குடிநீர் வரி உள்ளிட்ட வரி வசூல் மூலமே கிடைத்து வருகிறது.


      அவை நிர்வாகச் செலவுகளுக்கும், ஊழியர்களின் சம்பளத்திற்குமே போதுமானதாக இருந்து வருகிறது. கடந்த 2007 ல் நகராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படும். இந்த வரி உயர்வு சீராக இருந்தால், ஊழியர்களின் சம்பளம் உயரும்போது ஏற்படும் நிதிச்சுமையை சமாளிப்பது எளிது. ஆனால், 2007க்கு பின், 5 ஆண்டுகள் கழித்து 2013 ல் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால், நகராட்சிகளின் வருவாய் 2007 க்கு பின் உயரவில்லை.

இந்நிலையில் 2016 ஜன., 1 முதல் 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டி உள்ளது. இந்த சம்பள உயர்வு சில மாதங்கள் கழித்து அமல் படுத்தப்பட்டாலும், 2016 ஜன., 1 யை அடிப்படையாக கொண்டு நிலுவைத்தொகை வழங்க வேண்டி இருக்கும்.

வரிவருவாய் உயராத நிலையில், 7 வது சம்பளக்கமிஷனால் ஏற்படும் சம்பள உயர்வு நிதிச்சுமையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சம் நகராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஏற்ப, நகராட்சியின் வரி வருவாய் உயர்வுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அதற்கேற்ப மானியத்தொகையை வழங்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்