Skip to main content

மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

         மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களை உடனடியாக
நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

            புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால், ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளி முடிந்த, 10 நாளில் வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்' என்றனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி