Skip to main content

திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டி: ஆய்வுக் கட்டுரைகளை டிச.15-க்குள் அனுப்பலாம்

வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டிக்கு, டிசம்பர் 15-க்குள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.
இது குறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:

வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, மலர் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடத்தப்பட இருக்கும் திருவள்ளுவர் தின கருத்தரங்குக்கு "திருக்குறளில் உயிர்ச்சூழல்' அமைவு (Eco-System) எனும் தலைப்பின் கீழ் (ஃபாண்ட் அளவு 14-இல் 10 பக்கங்கள்) புதிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வள்ளுவத்துக்குள் புதைந்துள்ள வாழ்வியல் விழுமியங்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், தேர்வு பெறும் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும். மேலும், கட்டுரைக்கு அரை பவுன் தங்கக் காசு முதல் பரிசாக வழங்கப்பட உள்ளது.
கருத்தரங்கு நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதில், பங்கேற்க விரும்புவோர், கட்டுரையின் இரண்டு நகல்களுடன் தொடர்பு முகவரி, தொலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து டிசம்பர் 15-க்குள் அனுப்ப வேண்டும். இதற்கான முகவரி, "வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, 71-3, கோவலன் இரண்டாவது வீதி, ஆசிரியர் குடியிருப்பு, ஈரோடு-638 011'. மேலும் விவரங்களுக்கு 94430-27280 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்