Skip to main content

Flipkart's Big Billion Day விற்பனை. எதிர்பார்ப்புகள் என்ன?

அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் Flipkart மின் வணிக தளத்தின் Big Billion Day விற்பனை தொடங்க இன்னும் இரண்டு தினங்களே உள்ளது. எதிர் வரும் செவ்வாய் கிழமை 13-10-2015 முதல் 17-10-2015 ஐந்து தினங்கள் நடக்க இருக்கிறது.
சென்ற ஆண்டில் பல குளறுபடிகள் நடந்ததால் இந்த முறை
ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள் பிலிப்கார்ட் நிறுவாகத்தினர். சென்ற முறை பிலிப்கார்ட் சர்வர் டவுன் ஆனது. பலருக்கு பொருள்கள் கிடைக்கவில்லை. ஆர்டர் செய்தவர்களுக்கே பணத்தை திருப்பி தர வேண்டிய நிலைமை ஆனது. முடிவில் பிலிப்கார்டை கட்டாய மன்னிப்பு கோர சொன்னதின் பெயரில் பிலிப்கார்ட் நிறுவனமும் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கோரியது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். அப்படியும் சென்ற முறை600 கோடிக்கு விற்பனை நடந்தது.

இந்த முறை Flipkart App மூலம் விற்பனை பரிவர்த்தனை நடப்பதால் விற்பனை இரட்டிப்பாகும் என தெரிகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த பிலிப்கார்ட் இணை நிறுவனரும், முதன்மை அலுவலரும் ஆன சச்சின் பன்சால் (Sachin Bansal) 1.5 மில்லியன் பேர் பயனடைய முடியும். மேலும் விரைவில் அனைவருக்கு பொருளை அனுப்ப 19000 கூரியர் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியா முழுவதுமாக 20000 பின் கோட் இணைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று முக்கிய நகரங்களில் இருந்து கூரியர் மூலம் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே சென்ற முறை போன்று இந்த வருடம் பெரிய அளவில் குளறுபடி நடக்காது என நம்புவோம்.

மேலே படத்தில் தேதிகள் வாரியாக விற்பனை செய்யப்படும் பொருள்களின் விவரங்களையும் கொடுத்து இருக்கிறார்கள். இருப்பினும் தினமும் கவனித்து வாருங்கள்.சென்ற முறை போன்று இந்த முறையும் ஒரு ரூபாய் முதல் பென்டிரைவ், மெமரி கார்ட் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருள்கள் கிடைக்க இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒருசில எலக்ட்ரானிக் சாதனங்கள் 90 சதவீதம் வரையும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் 80 சதவீதம் வரை சலுகை விலையில் கிடைக்கும் என்று பிலிப்கார்ட் முதன்மை பிரதிநிதி Ankit Nagori டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் சொல்லி இருக்கார்.

Flipkart தற்போது மேம்படுத்திய அப்ளிகேசனை வெளியீட்டு இருக்கிறது.இங்கே கிளிக்செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான டீல்ஸ் காலை 8 மணிக்கே கிடைக்க தொடங்கும். எனவே அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கார்ட் விவரங்களை உள்ளீடு செய்து தயாராக வைத்து இருங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா