Skip to main content

அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு: அருள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, அருள்மொழி நேற்று பதவி ஏற்றார். அரசு இ - சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.அவர் அளித்த பேட்டி:போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை
காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ - சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நிரந்தர பதிவு, தேர்வு விண்ணப்பம், அதில் மாற்றம், நகல் பெறுதல் போன்ற சேவைகளுக்கு, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடத்தும், இ - சேவை மையங்களை அணுகலாம்; அதற்கு, கட்டணம் உண்டு. இந்த சேவைகள், எல்காட் நடத்தும், இ - சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2