Skip to main content

‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’ : மு.க.ஸ்டாலின்


‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’

        சங்கராபுரத்தில் பட்டதாரி ரேணுகாதேவி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். 2006ல் நிரந்தரம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சி வந்ததும் பணி நீக்கம் செய்து
விட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஆசிரியர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், என்றார்.


ஜெயலலிதாவுக்கு நிரந்தர ஓய்வு

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரத்தில் நெசவாளர் குடும்பங்களை சந்தித்து, ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது: சிறுதாவூரில் ஓய்வு, கோடநாடு தோட்டத்தில் ஓய்வு என எப்போதும் ஓய்வில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு 2016 தேர்தல் நிரந்தர ஓய்வு அளிக்கும். இதனை மக்களே தீர்மானித்து விட்டனர். விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறி உள்ளது. இவற்றை எல்லாம் சரிசெய்ய இயலாத ஆட்சியாக அதிமுக உள்ளது. திமுக ஆட்சியில், மாதம் முழுவதும் ரேஷன் பொருட்கள் கிடைத்தது. இந்த ஆட்சியில் மாதத்தின் தொடக்கத்திலேயே ரேஷனில் பொருட்கள் இல்லாமல் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ரேஷன் பொருட்களை பதுக்கி கள்ள மார்க்கெட்டியில் விற்று  கலெக்சன் பார்க்கிற இந்த அதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்ட, முற்றுப்புள்ளி வைக்க 2016 தேர்தலில் மக்கள் நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

தேனும், பலாவும் தந்த மலைவாழ் மக்கள்

செம்மரக்கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட மலைமக்களிடம் கலந்துரையாடல் முடிந்து ஸ்டாலின் புறப்பட்டபோது அவருக்கு சுவையான மலை தேன், பலாப்பழத்தை கொடுத்து தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தினர். கல்வராயன்மலையில் அதிகம் விளையும் மரவள்ளி கிழங்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் மலைமக்கள் வேங்கோடு ஊராட்சி தலைவர் கல்யாணிகிருஷ்ணன் தலைமையில் ஆளுக்கொரு மரவள்ளி கிழங்குடன் கூடிய செடியுடன் வரிசையாக நின்று விடை கொடுத்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்