Skip to main content

முதுகலை மாணவிக்கு கல்விச்சான்றிதழை திருப்பி கொடுக்கவேண்டும்

முதுகலை மாணவிக்கு கல்விச்சான்றிதழை திருப்பி கொடுக்கவேண்டும் அரசு மருத்துவ கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு:
மருத்துவ மாணவியின் கல்வி சான்றிதழை திருப்பி கொடுக்கும்படி சென்னை மருத்துவ அரசு கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்
ளது.


மருத்துவ கல்வி


சென்னை அரசு மருத்துவ கல்லூரியில், நோயியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ படிப்பில் பொன்னியின் செல்வி என்பவர் கடந்த 2014–ம் ஆண்டு சேர்ந்தார். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், நோயியல் பிரிவில் முதுகலை படிப்பில் அவருக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அவர் சேர்ந்தார்.பின்னர், தன்னுடைய கல்வி சான்றிதழ்களை திருப்பித் தரும்படி, சென்னை அரசு மருத்துவ கல்லூரி ‘டீனிடம்’ விண்ணப்பம் செய்தார். ஆனால், நோயியல் பிரிவு முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும்போது, சில உத்தரவாதங்களை கல்லூரி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பெற்றிருந்தது.


உத்தரவாதம்


அதில், படிப்பில் இருந்து விலகினால், ரூ.5 லட்சம் அபராதம் தொகையை செலுத்திய பின்னரே கல்விச்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவாத பத்திரத்தில், பொன்னியின் செல்வி கையெழுத்திட்டிருந்தார்.இதனால், உத்தரவாதத்தின் அடிப்படையில் ரூ.5 லட்சம் செலுத்தினால்மட்டுமே கல்விச்சான்றிதழ்களை திருப்பித்தர முடியும் என்று சென்னை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் கூறியது. இதை எதிர்த்துசென்னை ஐகோர்ட்டில், பொன்னியின் செல்வி வழக்கு தொடர்ந்தார்.


சான்றிதழ்கள்


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘மனுதாரர் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தாமல், அதைவிட சிறந்த படிப்பான மருத்துவ முதுகலை படிப்புக்காக வேறு கல்லூரிக்கு சென்றுள்ளார். எனவே, அவர் அபராத தொகையை செலுத்தவேண்டும் என்ற கேள்வியே எழுவில்லை. அவரது கல்விச் சான்றிதழ்களை சென்னை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உடனே வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா