Skip to main content

மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலை செய்யஈடுபடுத்தக்கூடாது எனவும், மீறும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க
மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஆசிரியர் பணியிடம் தவித்து, சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றன. இதனால், குடிநீர் எடுத்து வருவது, வகுப்பறை சுத்தம் செய்வது, கழிப்பறை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு, பல பள்ளிகளில் மாணவர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த புகார் எழுந்த நிலையில், பள்ளி வேலைகளில், மாணவ, மாணவியரை ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்கக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலைகளில் ஈடுபட செய்யக்கூடாது. அதற்கென பணியாற்றும் வேலையாற்றும் பணியாட்களை செய்து முடிக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி, மாணவர்களிடம் ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்