Skip to main content

அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர்
வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன் மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினர்.
அரியலுார் மாவட்டம், காளையங்குறிச்சி, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கலாமின் சிறு வயது முதலான புகைப்படங்களையும், அவர் பணியாற்றிய ராக்கெட் திட்டங்களின் மாதிரிகளையும் வைத்திருந்தனர். புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள், காற்றில் இயங்கும் விமானம் செய்து பறக்கவிட்டனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறி கருவி, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனம் உள்ளிட்ட, பலவித அறிவியல் கண்டு
பிடிப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றன. அரசு பள்ளி மாணவர்களின் இந்த தயாரிப்புகளை, தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர்; திறமையை வியந்து பாராட்டினர்.
இதற்கிடையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், கலாம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு, கலாமின், 10 அறிவுரைகள் உறுதிமொழியாக ஏற்கப்பட்டன. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன