Skip to main content

நாசா செல்ல வாய்ப்பு தரும் 'சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்'


மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனையை துாண்டும், 'சூப்பர் ப்ரெய்ன் சேலஞ்ச்' போட்டியை, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப் ஸ்கில் ஏஞ்சல்ஸ்' என்ற, நிறுவனம் அறிவித்துள்ளது; பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 

முதல் கட்டத் தகுதிப் போட்டி, நவம்பர், 14 முதல், 22 வரை, 'ஆன்லைனில்' நடத்தப்படுகிறது; இறுதி போட்டி, பின்னர் அறிவிக்கப்படும்.
இதுகுறித்து, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப்' நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:விளையாட்டு ஆர்வத்தை, சிந்தனை திறனாக வளர்க்க, இந்தப் போட்டியை நடத்துகிறோம்;


ஆங்கிலத்தில், வினாக்கள் மற்றும் விளையாட்டுகள் இருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் லேப் டாப்பில், இணையதளம் மூலம் மட்டுமே பங்கேற்கலாம்.ஒரு மணி நேரம் மட்டும் விளையாட அனுமதி. குறைந்த நேரத்தில், யார் சரியான விடைகளுடன், விளையாட்டை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கே அதிக மதிப்பெண். வகுப்பு மற்றும் வயதுக்கேற்ப, விளையாட்டு வகை வழங்கப்படும்.

வெற்றி பெறுவோரில் ஐந்து பேர், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கும், மூன்று பேர், சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். மேலும், 7,000 பேருக்கு, லேப்டாப், ஐ பேட் மற்றும் விளையாட்டு, 'கிட்' உட்பட, பல பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.பங்கேற்பது எப்படி? போட்டியில் பங்கேற்க, www.skillangels.com மற்றும்www.thesuperbrainchallenge.com என்ற இணையதளத்தில், பதிவுக் கட்டணத்துடன், நவம்பர், 22 வரை விண்ணப்பிக்கலாம். 

பதிவு செய்தவர்களுக்கு தனியாக, 'லாக் இன்' முகவரி வழங்கப்படும். மாதிரிப் போட்டிகள், மேலே குறிப்பிட்ட, இரண்டு இணையதள முகவரிகளில் உள்ளன. அவற்றை பயிற்சி எடுத்துப் பார்க்கலாம். விவரங்களுக்கு, 044- - 664 698 77 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்